Sriman Narayaneeyam - Dasaka 78 - பலராமனின் கல்யாணம் (ச்லோகம் 794)

Dasaka 78 - பலராமனின் கல்யாணம்

த்ரிதச வர்த்தகி வர்த்தித கௌசலம் த்ரிதச தத்த ஸமஸ்த விபூதிமத் ஜலதி மத்யகதம் த்வமபூஷயோ நவபுரம் வபுரஞ்சித ரோசிஷா த்ரிதச வர்த்தகி வர்த்தித கௌசலம் த்ரிதச தத்த ஸமஸ்த விபூதிமத் ஜலதி மத்யகதம் த்வம் அபூஷய: நவ புரம் வபு: அஞ்சித ரோசிஷா त्रिदशवर्धकिवर्धितकौशलं त्रिदशदत्तसमस्तविभूतिमत् । जलधिमध्यगतं त्वमभूषयो नवपुरं वपुरञ्चितरोचिषा

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தப் புதிய நகரம் கடலின் நடுவில் அமைந்தது ஆகும். அதனை தேவலோகச் சிற்பியான விச்வகர்மன் உருவாக்கினான். தேவர்கள் வழங்கிய செல்வத்திரள் அங்கு இருந்தன. அத்தகைய துவாரகை நகரத்தை நீ உனது திருமேனியின் அழகால் மேலும் அழகுபடுத்தினாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-52 முழுவதும் மற்றும் x-53ன் முதல் ஆறு ச்லோகங்கள் ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.