Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 793)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
ததநு மதுராம் கத்வா ஹத்வா சமூம் யவநாஹ்ருதாம் மகத பதிநா மார்க்கே ஸைந்யை: புரேவ நிவாரித: சரம விஜயம் தர்பாயாஸ்மை ப்ரதாய பலாயிதோ ஜலதி நகரீம் யாதோ வாத ஆலய ஈச்வர பாஹி மாம் ததநு மதுராம் கத்வா ஹத்வா சமூம் யவந ஆஹ்ருதாம் மகத பதிநா மார்க்கே ஸைந்யை: புரா இவ நிவாரித: சரம விஜயம் தர்பாய அஸ்மை ப்ரதாய பலாயித: ஜலதி நகரீம் யாத: வாத ஆலய ஈச்வர பாஹிமாம் तदनु मथुरां गत्वा हत्वा चमूं यवनाहृतां मगधपतिना मार्गे सैन्यैः पुरेव निवारितः । चरमविजयं दर्पायास्मै प्रदाय पलायितो जलधिनगरीं यातो वातालयेश्वर पाहि माम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ பின்னர் மதுராவிற்குச் சென்று அங்கு கால யவனனின் படைகளை அழித்தாய். நீ செல்லும் வழியில் உன்னைத் தனது படைகளுடன் ஜராசந்தன் தடுத்தான். அவனுக்கு கர்வம் மேலும் வளர, அவன் இறுதியாக ஒரு முறை வெற்றி பெறுவதுபோல் மாயையை உண்டாக்கினாய். (எப்படி என்றால்) நீ ஓடிச்சென்று கடலின் நடுவில் அமைக்கப்ட்டிருந்த துவாரகைக்குச் சென்றுவிட்டாய். இப்படிப்பட்ட நீயே என்னைக் காப்பாற்ற வேண்டும்.***