Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 792)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
ஐக்ஷ்வாகோSஹம் விரக்தோSஸ்ம்யகில ந்ருப ஸுகே த்வத் ப்ரஸாதைக காங்க்ஷீ ஹா தேவேதி ஸ்துவந்தம் வர விததிஷு தம் நிஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யந் முக்தேஸ்துல்யாம் ச பக்திம் துத ஸகல மலாம் மோக்ஷமப்யாசு தத்வா கார்யம் ஹிம்ஸா விசுத்யை தப இதி ச ததா ப்ராத்த லோக ப்ரதீத்யை ஐக்ஷ்வாக: அஹம் வ்ரக்த: அஸ்மி அகில ந்ருப ஸுகே த்வத் ப்ரஸாத ஏக காங்க்ஷீ ஹா தேவ இதி ஸ்துவந்தம் வர விததிஷு தம் நிஸ்ப்ருஹம் வீக்ஷ்ய ஹ்ருஷ்யந் முக்தே: துல்யாம் ச பக்திம் துத ஸகல மலாம் மோக்ஷம் அபி ஆசு தத்வா கார்யம் ஹிம்ஸா விசுத்யை தப இதி ச ததா ப்ராத்த லோக ப்ரதீத்யை: एक्ष्वाकोऽहं विरक्तोऽस्म्यखिलनृपसुखे त्वत्प्रसादैककाङ्क्षी हा देवेति स्तुवन्तं वरविततिषु तं निस्पृहं वीक्ष्य हृष्यन् । मुक्तेस्तुल्याञ्च भक्तिं धुतसकलमलं मोक्षमप्याशु दत्त्वा कार्यं हिंसाविशुद्धयै तप इति च तदा प्रास्थ लोकप्रतीत्यै
குருவாயூரப்பா! அந்த முசுகுந்தன் உன்னிடம், “நான் இக்ஷ்வாகு வம்சத்து அரசன் ஆவேன். எனக்கு அரச போகங்களில் விருப்பமோ நாட்டமோ இல்லை. உன்னுடைய அனுக்ரஹத்தை மட்டுமே வேண்டியுள்ளேன்”, என்று கூறி வணங்கினான். உன்னிடம் வரம் எதுவும் கேட்கவும் அவன் விரும்பவில்லை. அதனைக் கண்டு நீ மகிழ்ந்து அவனுக்கு மோக்ஷத்திற்கு ஒப்பான பக்தியை அளித்தாய். அவன் விரைந்து மோக்ஷம் பெறும் ஞானத்தை அளித்தாய். பல காலமாக அவன் வேட்டை மூலமாகச் செய்த கொலைகள் காரணமாக உண்டான பாவம் தொலைய தவம் செய்யுமாறும் கூறினாய்.