Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 791)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
பத்ப்யாம் த்வாம் பத்மமாலீ சகித இவ புராந்நிர்கதோ தாவமாந: ம்லேச்சேசேநாநுயாதோ வத ஸுக்ருத விஹீநேந சைலே ந்யலைஷீ: ஸுப்தேநாம்க்ர்யாஹதேந த்ருதமத முசுகுந்தேந பஸ்மீக்ருதேSஸ்மிந் பூபாயாஸ்மை குஹாந்தே ஸுலலித வபுஷா தஸ்திஷே பக்திபாஜே பத்ப்யாம் த்வம் பத்மமாலீ சகித இவ புராந் நிர்கத: தாவமாந: ம்லேச்ச ஈசேந அநுயாத: வத ஸுக்ருத விஹீநேந சைலே ந்யலைஷீ: ஸுப்தேந அம்க்ர்யா ஹதேந த்ருதம் அத முசுகுந்தேந பஸ்மீ க்ருதே அஸ்மிந் பூபாய அஸ்மை குஹாந்தே ஸுலலித வபுஷா தஸ்திஷே பக்திபாஜே पद्भ्यां त्वं पद्ममाली चकितिव पुरान्निर्गतो धावमानो म्लेच्छेशेनानुयातो वधसुकृतविहीनेन शैले न्यलैषीः । सुप्तेनाङ्घ्र्याहतेन द्रुतमथ मुचुकुन्देन भस्मीकृतेऽस्मिन् भूपायास्मै गुहान्ते सुललितवपुषा तस्थिषे भक्तिभाजे
குருவாயூரப்பா! அதன் பின்னர் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை உடைய நீ, ஜராசந்தனுக்கு அஞ்சி ஓடுவது போல் மதுராவை விட்டு வெளியில் ஓடினாய். உன் கையால் கொல்லப்படும் அளவிற்குக்கூடப் புண்ணியம் செய்யாத அந்த யவனர் தலைவன் (மிலேச்ச அரசன்) உன்னைத் தொடர, நீ ஒரு மலைக்குகைக்குள் சென்று ஒளிந்து கொண்டாய். அந்தக் குகைக்குள் வந்த அவன், அங்கு உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் என்பவனை (நீ என்று நினைத்து) காலால் உதைத்து எழுப்பினான். அந்த முசுகுந்தனின் வரத்தின் காரணமாக, அவன் விழித்துப் பார்த்ததும் எதிரே இருந்த மிலேச்ச அரசன் எரிந்து சாம்பலானான். அந்த நேரத்தில் சிறந்த விஷ்ணு பக்தனான அந்த முசுகுந்தனுக்கு நீ அழகான திருமேனியுடன் காட்சியளித்தாயாமே!