Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 790)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
அஷ்டாதசேSஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம் த்ருஷ்ட்வா புரோSத யவநம் யவந த்ரிகோட்யா த்வஷ்ட்ரா விதாப்ய புரமாசு பயோதி மத்யே தத்ராSத யோக பலத: ஸ்வ ஜநாநநைஷீ: அஷ்டாதசே அஸ்ய ஸமரே ஸமுபேயுஷி த்வம் த்ருஷ்ட்வா புர: அத யவநம் யவந த்ரி கோட்யா த்வஷ்ட்ரா விதாப்ய புரம் ஆசு பயோதி மத்யே தத்ர அத யோக பலத: ஸ்வ ஜநாத் அநைஷீ: अष्टादशेऽस्य समरे समुपेयुषि त्वं दृष्ट्वा पुरोऽथ यवनं यवनत्रिकोट्या । त्वष्ट्रा विधाप्य पुरमाशु पयोधिमध्ये तत्राऽथ योगबलतः स्वजनाननैषीः
குருவாயூரப்பா! உன்னிடம் ஜராசந்தன் பதினெட்டாவது முறையாக போருக்கு வந்தான். அப்போது அவனது மூன்று கோடி யவனர்களுடன் அவர்கள் தலைவனான காலயவனனைக் கண்டாய். நீ உடனே விச்வகர்மனை அழைத்து, கடலுக்கு அடியில் ஒரு நகரத்தை உருவாக்கினாய். உனது நாட்டில் உள்ள அனைவரையும் உன்னுடைய யோகத்தின் மூலமாக அந்த நகரத்தில் சென்று சேர்த்தாய்.