Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 789)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
பக்ந: ஸ லக்ந ஹ்ருதயோSபி ந்ருபை: ப்ரணுந்நோ யுத்தம் த்வயா வ்யதித ஷோடச க்ருத்வ ஏவம் அக்ஷெஹிணீ: சிவ சிவாஸ்ய ஜகந்த விஷ்ணோ ஸம்பூய ஸைகநவதி த்ரிசதம் ததாநீம் பக்ந: ஸ லக்ந ஹ்ருதய: அபி ந்ருபை: ப்ரணுந்ந: யுத்தம் த்வயா வ்யதித ஷோடச க்ருத்வ ஏவம் அக்ஷெஹிணீ: சிவ சிவ அஸ்ய ஜகந்த விஷ்ணோ ஸம்பூய ஸ ஏக நவதி த்ரிசதம் ததாநீம் भग्नस्स लग्नहृदयोऽपि नृपैः प्रणुन्नो युद्धं त्वया व्यधित षोडशकृत्व एवम् । अक्षौहिणीः शिव शिवास्य जघन्थ विष्णो सम्भूय सैकनवतित्रिशतं तदानीम्
குருவாயூரப்பா! மஹாவிஷ்ணுவே! அந்த ஜராசந்தன் உன்னிடம் தோற்றதால் மிகுந்த வெட்கம் அடைந்து இருந்தான். ஆயினும் மற்ற அரசர்கள் அவனைத் தூண்டினர். இதனால் அவன் உன்னுடன் பதினாறு முறை போர் செய்தானாமே! கடவுளே! கடவுளே! அந்தப் போர்கள் அனைத்திலும் நீ அவனது முந்நூற்று தொண்ணூற்றொரு அக்ஷௌஹிணிப் படைகளை அழித்தாய் அல்லவா?