Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 788)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
பத்தம் பலாதத பலேந பலோத்தரம் த்வம் பூயோ பலோத்யமரஸேந முமோசிதைநம் நிச்சேஷ திக் ஜய ஸமாஹ்ருத விச்வ ஸைந்யாத் கோSந்யஸ்ததோ ஹி பல பௌருஷவாம்ஸ்ததாநீம் பத்தம் பலாத் அத பலேந பலோத்தரம் த்வம் பூய: பல உத்யம ரஸேந முமோசித ஏநம் நிச்சேஷ திக் ஜய ஸமாஹ்ருத விச்வ ஸைந்யாத் க: அந்ய: தத: ஹி பல பௌருஷவாந் ததாநீம் बद्धं बलादथ बलेन बलोत्तरं त्वं भूयो बलोद्यमरसेन मुमोचिथैनम् । निश्शेषदिग्जयसमाहृतविश्वसैन्यात् कोऽन्यस्ततो हि बलपौरुषवांस्तदानीम्
குருவாயூரப்பா! அதன் பின்னர் பலராமன், வலிமை மிக்க அந்த ஜராசந்தனை வென்று அவனைக் கட்டிப்போட்டான். ஆனால் நீயோ, அவன் மீண்டும் தனது முழு ஆதரவுப் படைப்புகளைத் திரட்டிக் கொண்டு வருவதை விரும்பினாய். எனவே அவனது கட்டுகளை அவிழ்த்து விட்டாய். அனைத்து திசைகளுக்கும் சென்று அங்குள்ள அரசர்களை வென்றுள்ளதால் அவனது படை மிகவும் பெரியது ஆகும். இத்தனை பெரிய படைபலம் உள்ள அரசர்கள் அப்போது அவனைத் தவிர வேறு யாரும் இல்லை.