Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 787)

Dasaka 77 - ஜராசந்தன் போர்

விகாதாத் ஜாமாது: பரம ஸுஹ்ருதோ போஜ ந்ருபதே: ஜராஸந்தே ருந்தத்யநவதி ருஷாந்தேSத மதுராம் ரதாத்யைர் த்யோர் லப்தை: கதிபய பலஸ்த்வம் பலயுத: த்ரயோ விம்சத்யக்ஷௌஹிணி ததுபநீதம் ஸமஹ்ருதா: விகாதாத் ஜாமாது: பரம ஸுஹ்ருத: போஜ ந்ருபதே: ஜராஸந்தே ருந்ததி அநவதி ருஷா அந்தே அத மதுராம் ரத ஆத்யை: த்யோ: லப்தை: கதிபய பல: த்வம் பல யுத: த்ரய: விம்சதி அக்ஷௌஹிணி தத் உபநீதம் ஸமஹ்ருதா: विघाताज्जामातुः परमसुहृदो भोजनृपते - र्जरासन्धे रुन्धत्यनवधिरुषान्धेऽथ मथुराम् । रथाद्यैर्द्योलब्धैः कतिपयबलस्त्वं बलयुत - स्त्रयोविंशत्यक्षौहिणि तदुपनीतं समहृथाः

ஜராஸந்தனின் மாப்பிள்ளையும், அவனுடைய சிறந்த நண்பனும் ஆகிய கம்ஸனை நீ கொன்றதால், உன் மீது ஜராஸந்தன் மிகவும் கோபம் கொண்டான். தனது படையுடன் மதுராவைத் தாக்கினான். நீ விண்ணுலகில் இருந்து உனக்குக் கிடைத்த தேர் மற்றும் ஆயுதங்களுடன் பலராமனுடன் சேர்ந்து, ஜராஸந்தனின் இருபத்து மூன்று அக்ஷௌஹிணி படைகளை அழித்தாய் (ஒரு அக்ஷௌஹிணி - 2870 யானைகள், 2870 தேர்கள், 65610 குதிரைகள், 109350 வீரர்கள்).