Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 786)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
அக்ரூர மந்திரமிதோSத பலோத்தவாப்யாம் அப்யர்ச்சிதோ பஹு நுதோ முதிதேந தேந ஏநம் விஸ்ருஜ்ய விபிநாகத பாண்டவேய வ்ருத்தம் விவேதித ததா த்ருதராஷ்ட்ர சேஷ்டாம் அக்ரூர மந்திரம் இத: அத பல உத்தவாப்யாம் அப்யர்ச்சித: பஹு நுத: முதிதேந தேந ஏநம் விஸ்ருஜ்ய விபிந ஆகத பாண்டவேய வ்ருத்தம் விவேதித ததா த்ருதராஷ்ட்ர சேஷ்டாம் अक्रूरमन्दिरमितोऽथ बलोद्धवाभ्या - मभ्यर्चितो बहु नुतो मुदितेन तेन । एनं विसृज्य विपिनागतपाण्डवेयव्रुत्तं विवेदिथ तथा धृतराष्ट्रचेष्टाम्
குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ உத்தவரோடும் பலராமனோடும் அக்ரூரரின் வீட்டிற்குச் சென்றாய். உன்னைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்த அக்ரூரர் உன்னைப் பலவாறாகப் போற்றி வணங்கினார். நீ அக்ரூரரை பாண்டவர்களிடம் அனுப்பி, அவர்கள் காட்டில் இருந்து திரும்பி வந்த செய்தியையும், த்ருதராஷ்டிரன் அவர்களுக்கு இழைத்த தீமைகளையும் தெரிந்து கொண்டாய்.