Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 785)

Dasaka 77 - ஜராசந்தன் போர்

ததோ பவாந் தேந நிசாஸு காஸுசித் ம்ருகீத்ருசம் தாம் நிப்ருதம் விநோதயந் அதாதுபச்லோக இதி ச்ருதம் ஸுதம் ஸ நாரதாத் ஸாத்வத் தந்த்ர வித் பபௌ தத: பவாந் தேந நிசாஸு காஸுசித் ம்ருகீத்ருசம் தாம் நிப்ருதம் விநோதயந் அதாத் உபச்லோக இதி ச்ருதம் ஸுதம் ஸ நாரதாத் ஸாத்வத் தந்த்ர வித் பபௌ ततो भवान् देव निशासु कासुचिन् मृगीदृशं तां निभृतं विनोदयन् । अदादुपश्लोक इति श्रुतं सुतं स नारदात्सात्त्वततन्त्रविद् विभौ

குருவாயூரப்பா! அவள் கேட்டுக் கொண்டபடி, மான் போன்ற கண்களை உடைய அவளுடன் நீ சில இரவுகள் தங்கி அவளை இன்பமடையச் செய்தாய். அவள் மூலமாக உபச்லோகன் என்ற மகன் பிறந்தான். அவன் நாரதர் மூலமாக உயர்ந்த பாஞ்சராத்ர ஆகமத்தைக் கற்றுக் கொண்டான் அல்லவோ?