Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 784)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
ப்ருஷ்டா வரம் புநரஸாவவ்ருணோத் வராகீ பூயஸ்த்வயா ஸுரதமேவ நிசாந்தரேஷு ஸாயுஜ்யமஸ்த்விதி வதேத் புத ஏவ காமம் ஸாமீப்யமஸ்வநிசமித்யபி நாப்ரவீத் கிம் ப்ருஷ்டா வரம் புந: அஸௌ அவ்ருணோத் வராகீ பூய: த்வயா ஸுரதம் ஏவ நிசா அந்தரேஷு ஸாயுஜ்யம் அஸ்து இதி வதேத் புத ஏவ காமம் ஸாமீப்யம் அஸ்து அநிசம் இதி அபி ந அப்ரவீத் கிம் पृष्टा वरं पुनरसाववृणोद्वराकी भूयस्त्वया सुरतमेव निशान्तरेषु । सायुज्यमस्त्विति वदेत् बुध एव कामं सामीप्यमस्त्वनिशमित्यपि नाब्रवीत् किम्
குருவாயூரப்பா! நீ அவளிடம் வேறு ஏதாவது வரம் கேட்குமாறு கூறினாய். ஆனால் உன்னைத் தவிர வேறு ஒன்றையுமே அறியாத பேதைப்பெண் உன்னுடன் மேலும் சில இரவுகளில் இன்பமாக இருப்பதையே வரமாகக் கேட்டாள். மிகுந்த ஞானம் உடையவர்கள் மட்டுமே மோக்ஷம் கேட்பார்கள். அப்படிப்பட்ட நிலையான உனது அருகில் எப்போதும் இருக்கவேண்டும் என்பதை அவள் ஏன் கேட்கவில்லை (உனது மாயையோ)?