Sriman Narayaneeyam - Dasaka 77 - ஜராசந்தன் போர் (ச்லோகம் 783)
Dasaka 77 - ஜராசந்தன் போர்
உபகதே த்வயி பூர்ண மநோரதாம் ப்ரமத ஸம்ப்ரம கம்ப்ர பயோதராம் விவித மாநநமாதததீம் முதா ரஹஸி தாம் ரமயாஞ்சக்ருஷே ஸுகம் உபகதே த்வயி பூர்ண மநோரதாம் ப்ரமத ஸம்ப்ரம கம்ப்ர பயோதராம் விவித மாநநம் ஆதததீம் முதா ரஹஸி தாம் ரமயாந் சக்ருஷே ஸுகம் उपगते त्वयि पूर्णमनोरथां प्रमदसम्भ्रमकम्प्रपयोधराम् । विविधमाननमादधतीं मुदा रहसि तां रमयञ्चकृषे सुखम्
குருவாயூரப்பா! நீ அவள் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய விருப்பம் நிறைவேறியதால் பெரிதும் மகிழ்ந்தாள். மிகவும் பரபரப்புடன், தனது ஸ்தனங்கள் அசைய அவள் உனக்கு வேண்டிய பல மரியாதைகளைச் செய்தாள். நீ அவளுடன் தனிமையில் இருந்து, அவளைச் சுகமாக இருக்கும்படி செய்தாய் அல்லவா?