Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 781)

Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்

ஏவம் பக்தி ஸகல புவநே நேக்ஷிதா ந ச்ருதா வா கிம் சாஸ்த்ரௌகை: கிமிஹ தபஸா கோபிகாப்யோ நமோSஸ்து இத்யானந்தாகுலமுபகதம் கோகுலாதுத்தவம் தம் த்ருஷ்ட்வா ஹ்ருஷ்டோ குரு புர பதே பாஹி மாமாமயௌகாத் ஏவம் பக்தி ஸகல புவநே ந ஈக்ஷிதா ந ச்ருதா வா கிம் சாஸ்த்ர ஓகை: கிம் இஹ தபஸா கோபிகாப்ய: நம: அஸ்து இதி ஆதி ஆனந்த ஆகுலம் உபகதம் கோகுலாத் உத்தவம் தம் த்ருஷ்ட்வா ஹ்ருஷ்ட: குரு புர பதே பாஹி மாம் ஆமய ஓகாத் एवं भक्तिः सकलभुवने नेशिता न श्रुता वा किं शास्त्रौघैः किमिह तपसा गोपिकाभ्यो नमोऽस्तु । इत्यानन्दाकुलमुपगतं गोकुलादुद्धवं तं दृष्ट्वा हृष्टो गुरुपुरपते पाहि मामामयौघात्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உத்தவர் தனது மனதில், “இப்படிப்பட்ட ஒரு தீவிரமான பக்தியையும் அன்பையும் நான் வேறு எங்கும் கண்டதில்லை. சாத்திரங்களைக் கற்பதால் என்ன பயன் உள்ளது? தவம் இயற்றுவதால் என்ன பயன் உள்ளது? (இவர்களை வணங்கினால் போதுமே என்று எண்ணி) கோபிகைகளுக்கு என் பணிவான வணக்கங்கள்”, என்று நினைத்தார். மிகுந்த ஆனந்தத்துடன் உன்னிடம் வந்தார். நீயும் அவரைக் கண்டு (கோபிகைகளைக் கண்டது போல்) மகிழ்ந்தாய் அல்லவா? இப்படிப்பட்ட நீ, கூட்டமாக வரும் பிணிகளில் இருந்து என்னைக் காப்பாற்றுவாயாக.***