Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 780)
Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்
ஏஷ்யாமி த்ராகநுபகமநம் கேவலம் கார்ய பாராத் விச்லேஷேSபி ஸ்மரண த்ருடதா ஸம்பவாந்மாஸ்து கேத: ப்ரஹ்மானந்தே மிலதி நசிராத் ஸங்கமோ வா வியோக: துல்யோ வ: ஸ்யாதிதி தவ கிரா ஸோSகரோந் நிர்வ்யதாஸ்தா: ஏஷ்யாமி த்ராக் அநுபகமநம் கேவலம் கார்ய பாராத் விச்லேஷே அபி ஸ்மரண த்ருடதா ஸம்பவாத் மா அஸ்து கேத: ப்ரஹ்ம ஆனந்தே மிலதி ந சிராத் ஸங்கம: வா வியோக: துல்ய: வ: ஸ்யாத் இதி தவ கிரா ஸ: அகரோத் நிர்வ்யதா: தா: एष्यामि द्रागनुपगमनं केवलं कार्यभाराद् विश्लेषेऽपि स्मरणदृढतासम्भवान्मास्तु खेदः । ब्रह्मानन्दे मिलति न चिरात् सङ्गमो वा वियोग स्तुल्यो वः स्यादिति तव गिरा सोऽकरोन्निर्व्यथास्ताः
குருவாயூரப்பா! பின்னர் அவர் அந்த கோபிகைகளிடம் உனது தூது செய்தியான, “நான் மீண்டும் விரைவில் அங்கு வந்துவிடுவேன். எனக்கு இங்கு பல செயல்கள் நிகழ்த்த வேண்டியுள்ளதால் இப்போது வர இயலவில்லை. நாம் பிரிந்து இருந்தாலும் என்னைப் பற்றிய நினைவு உள்ளதால் வருத்தம் அடையாதீர்கள். விரைவில் ஆனந்தம் கொள்வீர்கள். அந்த நேரத்தில் உங்களுக்கு சேருவதோ பிரிவதோ ஒன்றாகவே இருக்கும்”, என்பதைக் கூறினார். இப்படியாக அவர்கள் மன வருத்தத்தை நீக்கினார்.