Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 779)
Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்
ராதாயா மே ப்ரியதமமிதம் மத் ப்ரியைவம் ப்ரவீதி த்வத் கிம் மௌநம் கலயஸி ஸகே மாநிநீ மத் ப்ரியேவ இத்யாத்யேவ ப்ரவததி ஸகி த்வத் ப்ரியோ நிர்ஜநே மாம் இத்தம் வாதைரரமயதயம் த்வத் ப்ரியாமுத்பலாக்ஷீம் ராதாயா மே ப்ரியதமம் இதம் மத் ப்ரியா ஏவம் ப்ரவீதி த்வத் கிம் மௌநம் கலயஸி ஸகே மாநிநீ மத் ப்ரியா ஏவ இதி ஆதி ஏவ ப்ரவததி ஸகி த்வத் ப்ரிய: நிர்ஜநே மாம் இத்தம் வாதை: அரமயத் அயம் த்வத் ப்ரியாம் உத்பல அக்ஷீம் राधाया मे प्रियतममिदं मत्प्रियैवं ब्रवीति त्वं किं मौनं कलयसि सखे मानिनी मत्प्रियेव । इत्याद्येव प्रवदति सखि त्वत्प्रियो निर्जने मामित्थंवादैररमयदयं त्वत्प्रियामुत्पलाक्षीम्
குருவாயூரப்பா! உத்தவர் உனது உற்ற தோழியான ராதையைக் கண்டார். அவளிடம், “க்ருஷ்ணனின் அன்பானவளே! க்ருஷ்ணன் என்னுடன் பேசும்போது - உத்தவா! இவை என் ராதைக்கு மிகவும் பிடிக்கும்; நீ என் ராதையைப் போல் பேசுகிறாயே! நீ ஏன் என் ராதையைப் போல் கோபம் கொண்டு மவுனமாக உள்ளாய் - என்று கூறுவான்”, என்று உரைத்து அவளை மகிழ்வித்தார்.