Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 778)

Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்

த்வத் ப்ரோத்காநை: ஸஹிதம் அநிசம் ஸர்வதோ கேஹ க்ருத்யம் த்வத் வார்த்தைவ ப்ரஸரதி மித: ஸைவ சோத்ஸ்வாபலாபா: சேஷ்டா: ப்ராயஸ்த்வதநுக்ருதய: த்வத் மயம் ஸர்வமேவம் த்ருஷ்ட்வா தத்ர வ்யமுஹத் அதிகம் விஸ்மயாதுத்தவோSயம் த்வத் ப்ரோத்காநை: ஸஹிதம் அநிசம் ஸர்வத: கேஹ க்ருத்யம் த்வத் வார்த்தா ஏவ ப்ரஸரதி மித: ஸா ஏவ ச உத்ஸ்வ அபலாபா: சேஷ்டா: ப்ராய: த்வத் அநுக்ருதய: த்வத் மயம் ஸர்வம் ஏவம் த்ருஷ்ட்வா தத்ர வ்யமுஹத் அதிகம் விஸ்மயாத் உத்தவ: அயம் त्वत्प्रोद्गाणैः सहितमनिशं सर्वतो गेहकृत्यं त्वद्वार्तैव प्रसरति मिथः सैव चोत्स्वापलापाः । चेष्टाः प्रायस्त्वदनुकृतयस्त्वन्मयं सर्वमेवं दृष्ट्वा तत्र व्यमुहदधिकं विस्मयादुद्धवोऽयम्

குருவாயூரப்பா! ப்ருந்தாவனத்தின் அனைத்து வீடுகளிலும் கோபர்கள் வீட்டு வேலைகள் செய்யும்போது கூட உனது லீலைகள் பற்றிய பாடல்களையே பாடினர். உன்னைப் பற்றியே அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் உறங்கும்போது கனவில் கூட சிந்தனையே உள்ளது. அவர்களுடைய ஒவ்வொரு செய்கையும் உன்னைச் சுற்றியே உள்ளது. இப்படியாக ப்ருந்தாவனம் முழுவதும் உனது மயமாகவே உள்ளதைக் கண்ட உத்தவர் மிகவும் மனம் மகிழ்வு கொண்டார்.