Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 777)

Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்

ஏவம் ப்ராயைர்விவச வசநை: ஆகுலா கோபிகாஸ்தா: த்வத் ஸந்தேசை: ப்ரக்ருதிமநயத் ஸோSத விஜ்ஞாந கர்பை: பூயஸ்தாபிர் முதிதமதிபிஸ்த்வத் மயீபிர் வதூபி: தத் தத் வார்த்தா ஸரஸமநயத் காநிசித் வாஸராணி ஏவம் ப்ராயை: விவச வசநை: ஆகுலா கோபிகா: தா: த்வத் ஸந்தேசை: ப்ரக்ருதிம் அநயத் ஸ: அத விஜ்ஞாந கர்பை: பூய: தாபி: முதிதமதிபி: த்வத் மயீபி: வதூபி: தத் தத் வார்த்தா ஸரஸம் அநயத் காநிசித் வாஸராணி एवं प्रायैर्विवशवचनैराकुला गोपिकास्ता - स्त्वत्सन्देशैः प्रकृतिमनयत् सोऽथ विज्ञानगर्भैः । भूयस्ताभिर्मुदितमतिभिस्त्वन्मयीभिर्वधूभि - स्तत्तद्वार्तासरसमनयत् कानिचिद्वासराणि

குருவாயூரப்பா! இப்படியாக கோபிகைகள் உன்னையே நினைத்து, தங்கள் நிலையை மறந்து உத்தவரிடம் மிகுந்த மன வருத்தத்துடன் பேசினார்கள். உத்தவர் அவர்களிடம் உன்னுடைய செய்திகளைக் கூறி அவர்களை சமாதானப்படுத்தினார். அவர் கூறிய வார்த்தைகளைக் கேட்ட கோபிகைகள் மிகவும் மகிழ்ந்து இயல்பு நிலைக்கு வந்தனர். உத்தவர் ப்ருந்தாவனத்தின் உனது லீலைகளைப் பற்றிப் பேசிக் கொண்டே சில நாட்கள் இன்பமுடன் இருந்தாராமே!