Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 776)

Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்

ராஸக்ரீடா லுலித லுலிதம் விச்லதத் கேச பாசம் மந்தோத்பிந்ந ச்ரம ஜலகணம் லோப நீயம் த்வதங்கம் காருண்யாப்தே ஸக்ருதபி ஸமாலிங்கிதும் தர்சயேதி ப்ரேமோந்மாதாத் புவநமதந த்வத் ப்ரியாஸ்த்வாம் விலேபு: ராஸக்ரீடா லுலித லுலிதம் விச்லதத் கேச பாசம் மந்த உத்பிந்ந ச்ரம ஜலகணம் லோப நீயம் த்வத் அங்கம் காருண்ய ஆப்தே ஸக்ருத் அபி ஸமாலிங்கிதும் தர்சய இதி ப்ரேம உந்மாதாத் புவநமதந த்வத் ப்ரியா: த்வாம் விலேபு: रासक्रीडालुलितललितं विश्लथत्केशपाशं मन्दोद्भिन्नश्रमजलकणं लोभनीयं त्वदङ्गम् । कारुण्याब्धे सकृदपि समालिङ्गितुं दर्शयेति प्रेमोन्मादाद्भुवनमदन त्वत्प्रियास्त्वां विलेपुः

குருவாயூரப்பா! அவர்கள் உன்னை நினைத்து, “கருணைக் கடலே! க்ருஷ்ணா! ராஸக்ரீடையின்போது உனது அழகான திருமேனி களைப்புற்றது: தலை முடிகள் கட்டவிழ்ந்தன; களைப்பு மிகுதியால் வியர்வை தோன்றின; இப்படிப்பட்ட உனது திருமேனி எங்கள் உள்ளத்தைக் கவர்ந்தது. இப்படிப்பட்ட திருமேனியை நாங்கள் மீண்டும் அணைத்துக் கொள்ள ஒருமுறையாவது நீ வரவேண்டும்”, என்று உன் மீது உண்டான காதலின் காரணமாகப் பலவாறு புலம்பினர் அல்லவா?