Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 775)
Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்
ஸ்ரீமந் கிம் த்வம் பித்ரு ஜந க்ருதே ப்ரேஷிதோ நிர்தயேந க்வாஸௌ காந்தோ நகர ஸுத்ருசாம் ஹா ஹரே நாத பாயா: ஆச்லேஷாணாமம்ருத வபுஷோ ஹந்த தே சும்பநாநாம் உத்மாதாநாம் குஹக வசஸாம் விஸ்மரேத் காந்த கா வா ஸ்ரீமந் கிம் த்வம் பித்ரு ஜந க்ருதே ப்ரேஷித: நிர்தயேந க்வ அஸௌ காந்த: நகர ஸுத்ருசாம் ஹா ஹரே நாத பாயா: ஆச்லேஷாணாம் அம்ருத வபுஷ: ஹந்த தே சும்பநாநாம் உத்மாதாநாம் குஹக வசஸாம் விஸ்மரேத் காந்த கா வா श्रीमन् किं त्वं पितृजनकृते प्रेषितो निर्दयेन क्वासौ कान्तो नगरसुदृशां हा हरे नाथ पायाः । आश्लेषाणाममृतवपुषो हन्त ते चुम्बनाना - मुन्मादानां कुहकवचसां विस्मरेत् कान्त का वा
குருவாயூரப்பா! அந்த கோபிகைகள் உத்தவரிடம், “ஸ்ரீமானே! எங்கள் மீது சிறிதும் இரக்கம் இல்லாத அந்தக் க்ருஷ்ணன், தனது பெற்றோர்களிடம் உங்களைத் தூது அனுப்பினானா? நகரத்துப் பெண்கள் பக்கம் சாய்ந்து விட்ட அவன் எங்கே உள்ளான்?”, என்றனர். தொடர்ந்து, “ஸ்ரீஹரி! நாதா! எங்களைக் காப்பாற்ற வேண்டும். சுந்தரமானவனே! அமிர்தம் போன்ற இனிய திருமேனியை உடைய உனது அரவணைப்பையும், நீ அளித்த முத்தங்களையும், கபடமான சொற்களையும் யாரால் மறக்க இயலும்?”, என்று க்ருஷ்ணைக் குறித்துப் புலம்பினர்.