Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 774)

Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்

த்ருஷ்ட்வா சைநம் த்வதுபம் லஸத் வேஷ பூஷாபிராமம் ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதாந் உச்சகைஸ்தாநி தாநி ருத்தாலாபா: கதமபி புந: கத்கதாம் வாசமூசு: சௌஜந்யாதீந் நிஜ பர பிதாம் அப்யலம் விஸ்மரந்த்ய: த்ருஷ்ட்வா ச ஏநம் த்வத் உபம் லஸத் வேஷ பூஷா அபிராமம் ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா தவ விலஸிதாந் உச்சகை: தாநி தாநி ருத்த ஆலாபா: கதம் அபி புந: கத்கதாம் வாசம் ஊசு: சௌஜந்ய ஆதீந் நிஜ பர பிதாம் அபி அலம் விஸ்மரந்த்ய: दृष्ट्वा चैनं त्वदुपमलसद्वेषभूषाभिरामं स्मृत्वा स्मृत्वा तव विलसितान्युच्चकैस्तानि तानि । रुद्धालापाः कथमपि पुनर्गद्गदां वाचमूचुः सौजन्यादीन् निजपरभिदामप्यलं विस्मरन्त्यः

குருவாயூரப்பா! உனது ஆடை அணிகலன்களைப் போலவே உத்தவரும் உடைகள் அணிந்திருந்தார். அவரைக் கண்டதும் உனது லீலைகளை எண்ணி எண்ணி பேச முடியாமல் நின்றனர். இதனால் உத்தவர் தங்கள் விருந்தினர் என்பதை மறந்து, அவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளை மறந்தனர். பின்னர் தங்கள் குரல் உடைந்து போன நிலையில் பின்வருமாறு கூறினார்கள்.