Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 773)

Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்

த்வந் மஹாத்ம்ய ப்ரதிம பிசுநம் கோகுலம் ப்ராப்ய ஸாயம் த்வத் வார்த்தாபிர்பஹு ஸ ரமயாமாஸ நந்தம் யசோதாம் ப்ராதர் த்ருஷ்ட்வா மணிமய ரதம் சங்கிதா: பங்கஜாக்ஷ்ய: ச்ருத்வா ப்ராப்தம் பவதநுசரம் த்யக்த கார்யா: ஸமீயு: த்வந் மஹாத்ம்ய ப்ரதிம பிசுநம் கோகுலம் ப்ராப்ய ஸாயம் த்வத் வார்த்தாபி: பஹு ஸ ரமயாமாஸ நந்தம் யசோதாம் ப்ராத: த்ருஷ்ட்வா மணிமய ரதம் சங்கிதா: பங்கஜ அக்ஷ்ய: ச்ருத்வா ப்ராப்தம் பவத் அநுசரம் த்யக்த கார்யா: ஸமீயு: त्वन्माहात्म्यप्रथिमपिशुनं गोकुलं प्राप्य सायं त्वद्वार्ताभिर्बहु स रमयामास नन्दं यशोदाम् । प्रातर्दृष्ट्वा मणिमयरथं शङ्किताः पङ्कजाक्ष्यः श्रुत्वौ प्राप्तं भवदनुचरं त्यक्तकार्याः समीयुः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த உத்தவர், உனது பெருமைகளை உலகிற்கு வெளிப்படுத்தும் தன்மைகள் உடைய ப்ருந்தாவனத்திற்கு மாலை நேரத்தில் வந்தார். உன்னைப் பற்றிப் புகழ்ந்து கூறி நந்தகோபரையும் யசோதையையும் மகிழ்வு கொள்ளச் செய்தார். மறுநாள் காலை, கோபிகைகள் நந்தகோபரின் வீட்டு வாயிலில் நின்ற (உத்தவரின்) தேரைக் கண்டு ஐயம் கொண்டனர். உன்னிடம் இருந்து தூதர் வந்துள்ளதாகக் கேள்விப்பட்டனர். தங்கள் வீட்டு வேலைகளையெல்லாம் அப்படியே விட்டு, உத்தவரைக் காண விரைந்து வந்தனராமே!