Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 772)
Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்
ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பசுப ஸுத்ருச: ப்ரேம பார ப்ரணுந்நா: காருண்யேந த்வமபி விவச: ப்ராஹிணோருத்தவம் தம் கிஞ்சாமுஷ்மை பரம ஸுஹ்ருதே பக்த வர்யாய தாஸாம் பக்த்யுத்ரேகம் ஸகல புவநே துர்லபம் தர்சயிஷ்யந் ஸ்ம்ருத்வா ஸ்ம்ருத்வா பசுப ஸுத்ருச: ப்ரேம பார ப்ரணுந்நா: காருண்யேந த்வம் அபி விவச: ப்ராஹிணோ: உத்தவம் தம் கிஞ்ச அமுஷ்மை பரம ஸுஹ்ருதே பக்த வர்யாய தாஸாம் பக்தி உத்ரேகம் ஸகல புவநே துர்லபம் தர்சயிஷ்யந் स्मृत्वा स्मृत्वा पशुपसुदृशः प्रेमभारप्रणुन्नाः कारुण्येन त्वमपि विवशः प्रहिणोरुद्धवं तम् । किञ्चामुष्मै परमसुहृदे भक्तवर्याय तासां भक्त्युद्रेकं सकलभुवने दुर्लभं दर्शयिष्यन्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன் மீது கொண்டிருந்த ப்ரேம பக்தியால் கோபிகைகள் உருகுவார்களே என்று நினைத்து நினைத்து நீ உன் நிலையை இழந்தாய். அவர்களது பக்தியைப் போன்று இந்த உலகத்தில் யாரும் பக்தியுடன் இருக்க இயலாது. இத்தனை உன்னுடைய சிறந்த பக்தனும் நண்பனும் ஆகிய உத்தவருக்கு நீ உணர்த்த எண்ணம் கொண்டாய். எனவே அவரை ப்ருந்தாவனத்திற்குத் தூதனாக அனுப்பினாய்.