Sriman Narayaneeyam - Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல் (ச்லோகம் 771)
Dasaka 76 - உத்தவர் ப்ருந்தாவனம் செல்லுதல்
கத்வா ஸாந்தீபநிமத சதுஷ் ஷஷ்டி மாத்ரைரஹோபி: ஸர்வஜ்ஞஸ்த்வம் ஸஹ முஸலிநா ஸர்வ வித்யா க்ருஹீத்வா புத்ரம் நஷ்டம் யம நிலயநாத் ஆஹ்ருதம் தக்ஷிணார்த்தம் தத்வா தஸ்மை நிஜ புரமகா நாதயந் பாஞ்சஜன்யம் கத்வா ஸாந்தீபநிம் அத சது: ஷஷ்டி மாத்ரை: அஹோபி: ஸர்வஜ்ஞ: த்வம் ஸஹ முஸலிநா ஸர்வ வித்யா க்ருஹீத்வா புத்ரம் நஷ்டம் யம நிலயநாத் ஆஹ்ருதம் தக்ஷிணார்த்தம் தத்வா தஸ்மை நிஜ புரம் அகா நாதயந் பாஞ்சஜன்யம் गत्वा सान्दीपनिमथ चतुष्षष्टिमात्रैरहोभिः सर्वज्ञस्त्वं सह मुसलिना सर्वविद्यां गृहीत्वा । पुत्रं नष्टं यमनिलयनादाहृतं दक्षिणार्थं दत्त्वा तस्मै निजपुरमगा नादयन् पाञ्चजन्यम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அனைத்தும் அறிந்தவனாக இருந்தாலும், பலராமனுடன் சேர்ந்து ஸாந்தீபநி என்ற முனிவரிடம் கல்வி கற்கச் சென்றாய். அனைத்து வித்யைகளையும் அறுபத்து நான்கு நாட்களிலேயே கற்றுக்கொண்டாய். முன்பு ஒரு சமயம் இறந்து போன அவரது புத்ரனின் உயிரை யமலோகத்திற்குச் சென்று, அங்கிருந்து மீட்டுக் கொடுத்தாய். அதனை உனது குரு தக்ஷணையாகச் செலுத்தினாய். பின்னர் பாஞ்சஜன்யம் என்னும் உனது சங்கை ஊதிக்கொண்டே மதுராவிற்குத் திரும்பினாய்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-45-31 முதல் அத்யாயம் 47 முடிய உள்ளவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.