Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 770)

Dasaka 75 - கம்ஸ வதம்

தத் ப்ராத்ரூநஷ்ட பிஷ்ட்வா த்ருதம் அத பிதரௌ ஸந்நமந்நுக்ரஸேநம் க்ருத்வா ராஜாநமுச்சைர் யதுகுலம் அகிலம் மோதயந் காமதாநை: பக்தாநாமுத்தமம் சோத்தவமமரகுரோ: ஆப்த நீதிம் ஸகாயம் லப்த்வா துஷ்டோ நகர்யாம் பவநபுரபதே ருந்தி மே ஸர்வ ரோகாந் தத் ப்ராத்ரூந் அஷ்ட பிஷ்ட்வா த்ருதம் அத பிதரௌ ஸந்நமந் உக்ரஸேநம் க்ருத்வா ராஜாநம் உச்சை: யதுகுலம் அகிலம் மோதயந் காமதாநை: பக்தாநாம் உத்தமம் ச உத்தவம் அமரகுரோ: ஆப்த நீதிம் ஸகாயம் லப்த்வா துஷ்ட: நகர்யாம் பவநபுரபதே ருந்தி மே ஸர்வ ரோகாந் तद्भ्रातॄनष्ट पिष्ट्वा द्रुतमथ पितरौ सन्नमन्नुग्रसेनं कृत्वा राजानमुच्चैर्यदुकुलमखिलं मोदयन्कामदानैः । भक्तानामुत्तमम्ञ्चोद्धवममरगुरोराप्तनीतिं सखायं लब्ध्वा तुष्टो नगर्यां पवनपुरपते रुन्धि मे सर्वरोगान्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பின்னர் நீ கம்ஸனின் எட்டு தம்பிகளையும் அழித்தாய். உனது பெற்றோர்களான வஸுதேவரையும், தேவகியையும் கண்டு வணங்கினாய். உக்கிரஸேனருக்கு மீண்டும் அரச பதவியை அளித்தாய். யதுகுலத்தில் பிறந்த அனைவருக்கும் அனைத்தும் கொடுத்தாய். உனது பக்தர்களில் சிறந்தவனும், தேவகுருவான ப்ருஹஸ்பதியிடம் பயின்றவனும் ஆகிய உத்தவரை உனது நண்பராகக் கொண்டாய். இப்படியாக நீ மதுராவில் மகிழ்வுடன் வசிக்கத் தொடங்கினாய். குருவாயூரின் பதியே! இப்படிப்பட்ட நீ எனது பிணிகளைத் தீர்க்க வேண்டும்.***