Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 769)
Dasaka 75 - கம்ஸ வதம்
ஸத்யோ நிஷ்பிஷ்ட ஸந்திம் புவி நர பதிம் ஆபாத்ய தஸ்யோபரிஷ்டாத் த்வய்யபாத்யே ததைவ த்வதுபரி பதிதா நாகிநாம் புஷ்பவ்ருஷ்டி: கிம் கிம் ப்ரூமஸ்ததாநீம் ஸததமபி பியா த்வத் கதாத்மா ஸ பேஜே ஸாயுஜ்யம் த்வத் வதோத்தா பரம பரம இயம் வாஸநா காலநேமே: ஸத்ய: நிஷ்பிஷ்ட ஸந்திம் புவி நரபதிம் ஆபாத்ய தஸ்ய உபரிஷ்டாத் த்வயி ஆபாத்யே ததா ஏவ த்வத் உபரி பதிதா நாகிநாம் புஷ்ப வ்ருஷ்டி: கிம் கிம் ப்ரூம: ததாநீம் ஸததம் அபி பியா த்வத் கத ஆத்மா ஸ பேஜே ஸாயுஜ்யம் த்வத் வத உத்தா பரம பரம இயம் வாஸநா காலநேமே: सद्यो निष्पिष्टसन्धिं भुवि नरपतिमापात्य तस्योपरिष्टात् त्वय्यापात्ये तदैव त्वदुपरि पतिता नाकिनां पुष्पवृष्टिः । किं किं ब्रूमस्तदानीं सततमपि भिया त्वद्गतात्मा स भेजे सायुज्यं त्वद्वधोत्था परम परमियं वासना कालनेमेः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ பிடித்ததால் கம்ஸனின் மூட்டுகள் உடைந்தன. அவனைத் தரையில் தள்ளினாய். அவன் மீது விழுந்தாய். அப்போது மகிழ்ந்த தேவர்கள் உன் மீது மலர்கள் தூவி வணங்கினர். பரப்ரஹ்மமே! நான் என்ன சொல்வது? உன்னிடம் இருந்த பயம் காரணமாக அவன் உன்னையே எண்ணியவனாக இருந்தான். இதனால் உன்னுடன் அவன் ஐக்யமானான். அவன் உன்னுடன் சேர்வதற்கான பாக்கியம் என்ன? முன் ஜென்மத்தில் அவன் காலநேமியாக இருந்து உன்னால் கொல்லப்பட்டான். இதனால் அவனுக்கு இந்தப் பிறவியிலும் புண்ணியம் கிடைத்தது.