Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 768)

Dasaka 75 - கம்ஸ வதம்

கம்ஸ ஸர்வார்ய தூர்யம் கல மதி: அவிதந் கார்யமார்யாந் பித்ரூம்ஸ்தாந் ஆஹந்தும் வ்யாப்த மூர்த்தேஸ்தவ ச ஸமசிஷத் தூரமுத்ஸாரணாய ருஷ்டோ துஷ்டோக்திபிஸ்த்வம் கருட இவ கிரிம் மஞ்சமஞ்சந்நுதஞ்சத் கட்க வ்யாவல்க துஸ்ஸங்க்ரஹமபி ச ஹடாத் ப்ராக்ரஹீரௌக்ரஸேநீம் கம்ஸ ஸர்வார்ய தூர்யம் கல மதி: அவிதந் கார்யம் ஆர்யாந் பித்ரூந் தாந் ஆஹந்தும் வ்யாப்த மூர்த்தே: தவ ச ஸமசிஷத் தூரம் உத்ஸாரணாய ருஷ்ட: துஷ்ட உக்திபி: த்வம் கருட இவ கிரிம் மஞ்சம் அஞ்சந் உதஞ்சத் கட்க வ்யாவல்க துஸ்ஸங்க்ரஹம் அபி ச ஹடாத் ப்ராக்ரஹீ: ஓளக்ரஸேநீம் कंसस्संवार्यं तूर्यं खलमतिरविदन् कार्यमार्यान् पितॄंस्ता- नाहन्तुं व्याप्तमूर्तेस्तव च समशिषद्दूरमुत्सारणाय । रुष्टो दुष्टोक्तिभिस्त्वं गरुड इव गिरिं मञ्चमञ्चन्नुदञ्चत् खङ्गव्यावद्गदुस्संग्रहमपि च हठात्प्राग्रहीरौग्रसेनिम्

குருவாயூரப்பா! இதனைக் கண்ட கொடுமையான கம்ஸன், தூர்ய வாத்தியத்தை நிறுத்தும்படி கூறினான். என்ன செய்வது என்று புரியாமல், வணங்க வேண்டியவர்களான உக்ரசேனன், நந்தகோபர், வஸுதேர் ஆகியோர்களைக் கொல்லும்படி உத்தரவிட்டான். உன்னை வெகுதூரம் விரட்டும்படி உத்தரவிட்டான். அவனது இத்தகைய கொடுமையான கட்டளைகளால் நீ மிகுந்த கோபம் கொண்டாய். உடனே கருடன் வேகமாகப் பறந்து பாய்வது போல் அவன் அமர்ந்திருந்த இருக்கை மீது பாய்ந்தாயாமே! அவன் தனது வாளை வீசியபடி உன்னால் அவனைப் பிடிக்க முடியாமல் தடுக்க முயற்சித்தான். ஆயினும் நீ அவனைப் பிடித்தாய் அல்லவா?