Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 767)
Dasaka 75 - கம்ஸ வதம்
ஹா திக் கஷ்டம் குமாரௌ ஸுலலித வபுஷௌ மல்லவீரௌ கடோரௌ ந த்ரக்ஷ்யாமோ வ்ரஜாமஸ்த்வரிதமிதி ஜநே பாஷமாணே ததாநீம் சாணூரம் தம் கரோத்ப்ராமண விகலத் அஸும் போதயாமாஸிதோர்வ்யாம் பிஷ்டோSபூந்முஷ்டிகோSபி த்ருதமத ஹலிநா நஷ்ட சிஷ்டைர் ததாவே ஹா திக் கஷ்டம் குமாரௌ ஸுலலித வபுஷௌ மல்லவீரௌ கடோரௌ ந த்ரக்ஷ்யாம: வ்ரஜாம: த்வரிதம் இதி ஜநே பாஷமாணே ததாநீம் சாணூரம் தம் கர உத்ப்ராமண விகலத் அஸும் போதயாமாஸித உர்வ்யாம் பிஷ்ட: அபூத் முஷ்டிக: அபி த்ருதம் அத ஹலிநா நஷ்ட சிஷ்டை: ததாவே हा धिक्कष्टं कुमारौ सुललितवपुषौ मल्लवीरौ कठोरौ न द्रक्ष्यामो व्रजामस्त्वरितमिति जने भाषमाणे तदानीम् । चाणूरं तं कराद्भ्रामणविगलदसुं पोथयामासिथोर्व्यां पिष्टोऽभून्मुष्टिकोऽपि द्रुतमथ हलिना नष्टशिष्टैर्दधावे
குருவாயூரப்பா! அங்கு இருந்த மக்கள், “ஆஹா! இது என்ன கொடுமை! அந்தச் சிறுவர்கள் மிகவும் மென்மையான உடலுடன் உள்ளனரே! அந்த மல்லர்கள் கொடியவர்கள் ஆயிற்றே. நாம் இந்தப் போட்டியைக் காண்பதை விட இங்கிருந்து போய் விடலாம்”, என்று கூறிக்கொண்டனர். அந்த நேரத்தில் நீ சாணூரனைக் கைகளால் பிடித்துச் சுழற்றினாய். அவன் உயிர் பிரியும் தறுவாயில் அவனைத் தரையில் ஓங்கி அடித்தாய். அதே போல் பலராமனும் முஷ்டிகனை அழித்தான். மற்ற மல்லர்கள் அஞ்சி ஓடி விட்டனராமே!