Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 766)
Dasaka 75 - கம்ஸ வதம்
சாணூரோ மல்லவீரஸ்ததநு ந்ருப கிரா முஷ்டிகோ முஷ்டிசாலீ த்வாம் ராமம் சாபிபேதே ஜட ஜடிதி மிதோ முஷ்டி பாதாதிரூக்ஷம் உத்பாதாபாதநாகர்ஷண விவித ரணாந்யாஸதாம் தத்ர சித்ரம் ம்ருத்யோ: ப்ராகேவ மல்ல ப்ரபுரகமத் அயம் பூரிசோ பந்த மோக்ஷாந் சாணூர: மல்லவீர: ததநு ந்ருப கிரா முஷ்டிக: முஷ்டிசாலீ த்வாம் ராமம் ச அபிபேதே ஜட ஜடிதி மித: முஷ்டி பாத அதி ரூக்ஷம் உத்பாத ஆபாதந ஆகர்ஷண விவித ரணாநி ஆஸதாம் தத்ர சித்ரம் ம்ருத்யோ: ப்ராக் ஏவ மல்லப்ரபு: அகமத் அயம் பூரிச: பந்த மோக்ஷாந் चाणूरो मल्लवीरस्तदनु नृपगिरा मुष्टिको मुष्टिशाली त्वां रामञ्चाभिपेदे झटझटिति मिथो मुष्टिपातातिरूक्षम् । उत्पातापातनाकर्षणविविधरणान्यासतां तत्र चित्रं मृत्योः प्रागेव मल्लप्रभुरगमदयं भूरिशो बन्धमोक्षान्
ப்ரபுவே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது கம்ஸனின் ஆணைக்கு இணங்க சாணூரன் என்பவன் உன்னுடன் மல்யுத்தம் செய்தான். முஷ்டிப் போரில் தேர்ந்தவனான முஷ்டிகன் என்பவன் பலராமனுடன் மோதினான். உங்கள் முஷ்டிகள் மோதியபோது எழுந்த “சட சட” என்ற சத்தம் அச்சம் விளைவித்தது. மேலே தூக்கி எறிவதும், கீழே தள்ளுவதும், கையைப் பிடித்து வேகமாக இழுப்பதும் ஆகிய பல முறைகளில் மல்யுத்தம் நடைபெற்றது. சாணூரன் என்ற அந்த மல்லன் இறப்பதற்கு முன்னால் பலமுறை பந்தமும் (உனக்கு கட்டுப்படுதலும்), மோக்ஷமும் அடைந்தான் அல்லவா?