Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 765)

Dasaka 75 - கம்ஸ வதம்

பூர்ணம் ப்ரஹ்மைவ ஸாக்ஷாந்நிரவதி பரமாநந்த ஸாந்த்ர ப்ரகாசம் கோபேஷு த்வம் வ்யலாஸீர்ந கலு பஹு ஜநைஸ்தாவதாவேதிதோSபூ: த்ருஷ்ட்வாSத த்வாம் ததேதம் ப்ரதமமுபகதே புண்ய காலே ஜநௌகா: பூர்ணானந்தா விபாபா: ஸரஸம் அபிஜகுஸ்த்வத் க்ருதாநி ஸ்ம்ருதாநி பூர்ணம் ப்ரஹ்ம ஏவ ஸாக்ஷாத் நிரவதி பரம ஆநந்த ஸாந்த்ர ப்ரகாசம் கோபேஷு த்வம் வ்யலாஸீ: ந கலு பஹு ஜநை: தாவத் ஆவேதித: அபூ: த்ருஷ்ட்வா அத த்வாம் தத் இதம் ப்ரதமம் உபகதே புண்ய காலே ஜந ஓகா: பூர்ண ஆனந்தா விபாபா: ஸரஸம் அபிஜகு: த்வத் க்ருதாநி ஸ்ம்ருதாநி पूर्णं ब्रह्मैव साक्षान्निरवधिपरमानन्दसान्द्रप्रकाशं गोपेषु त्वं व्यलासीर्न खलु बहुजनैस्तावदावेदितोऽभूः । दृष्ट्वाथ त्वां तदेदं प्रथममुपगते पुण्यकाले जनौघाः पूर्णानन्दा विपापाः सरसमभिजगुस्त्वत्कृतानि स्मृतानि

குருவாயூரப்பா! நீ பரிபூர்ணமாக எங்கும் உள்ளவன்; பரப்ரஹ்மமாகவே உள்ளவன்; எல்லைகள் இல்லாத பரமானந்த வடிவமானவன்; ப்ரகாசமானவன்; இத்தகைய நீ, கோபர்களின் கண்களுக்குத் தெரியும்படி, அவர்கள் நடுவிலேயே வாழ்ந்தாய். அப்போது உன்னை இப்படியாக அவர்கள் அறியவில்லை. ஆயினும் தங்கள் புண்ணியகாலம் பலிக்கும் நேரம் வந்தபோது உன்னை இப்படியாக (மேலே கூறியபடி) காண முடிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவர்களாகவும், மனம் முழுவதும் ஆனந்தம் உடையவர்களாகவும் மாறினார்கள். உடனே உனது லீலைகளைப் பாடல்களாகப் பாடினர்.