Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 764)
Dasaka 75 - கம்ஸ வதம்
க்ருஹ்ணாநம் தந்தமம்ஸே யுதமத ஹலிநா ரங்கமங்மாவிசந்தம் த்வாம் மங்கல்யாங்க பங்கீ ரபஸ ஹ்ருத மநோலோசநா வீக்ஷ்ய லோகா: ஹம்ஹோ தந்யோ ஹி நந்தோ நஹி நஹி பசுபாலாங்கநா நோ யசோதா நோ நோ தந்யேக்ஷணா: ஸ்மஸ்த்ரிஜகதி வயமேவேதி ஸர்வே சசம்ஸு: க்ருஹ்ணாநம் தந்தம் அம்ஸே யுதம் அத ஹலிநா ரங்கம் அங்க ஆவிசந்தம் த்வாம் மங்கல்ய அங்க பங்கீ ரபஸ ஹ்ருத மந: லோசநா வீக்ஷ்ய லோகா: ஹம்ஹோ தந்ய: ஹி நந்த: நஹி நஹி பசுபால அங்கநா நோ யசோதா நோ நோ தந்ய ஈக்ஷணா: ஸ்ம: த்ரிஜகதி வயம் ஏவ இதி ஸர்வே சசம்ஸு: गृह्णानं दन्तमंसे युतमथ हलिना रङ्गमङ्गाविशन्तं त्वां मङ्गल्याङ्गभङ्गीरभसहृतमनोलोचना वीक्ष्य लोकाः । हंहो धन्यो नु नन्दो नहि नहि पशुपालाङ्गना नो यशोदा नो नो धन्येक्षणाः स्मस्त्रिजगति वयमेवेति सर्वे शशंसुः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த தந்தங்களை உங்கள் தோள்களில் பதித்து நீயும் பலராமனும் அந்த மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தீர்கள். அங்கு இருந்த மக்கள், உனது மங்களகரமான திருமேனியால் தங்கள் மனதும் கண்களும் கவரப்பட்டவர்கள் ஆனார்கள். அவர்கள், “ஆஹா! இந்த மூன்று உலகங்களிலும் மிகுந்த புண்ணியசாலி நந்தகோபரே ஆவார். இல்லை! இல்லை! கோபிகைகளே ஆவர். இல்லை இல்லை! யசோதையே ஆவாள். இல்லை இல்லை! இக்காட்சியைக் காணக் கண் படைக்கப்பட்ட நாம் அல்லவோ பாக்கியம் பெற்றவர்கள் ஆவோம்”, என்று வியந்தனர்.