Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 763)

Dasaka 75 - கம்ஸ வதம்

ஹஸ்த ப்ராப்யோSப்யகம்ய: ஜடிதி முநிஜநஸ்யேவ தாவந் கஜேந்த்ரம் க்ரீடந்நாபாத்ய பூமௌ புநரபிபதத: தஸ்ய தந்தம் ஸஜீவம் மூலாதுந்மூல்ய தந்மூலக மஹித மஹா மௌக்திகாந்யாத்ம மித்ரே ப்ராதாஸ்த்வம் ஹாரமேபிர் லலித விரசிதம் ராதிகாயை திசேதி ஹஸ்த ப்ராப்ய: அபி அகம்ய: ஜடிதி முநிஜநஸ்ய இவ தாவந் கஜேந்த்ரம் க்ரீடந் ஆபாத்ய பூமௌ புந: அபிபதத: தஸ்ய தந்தம் ஸஜீவம் மூலாத் உந்மூல்ய தத் மூலக மஹித மஹா மௌக்திகாநி ஆத்ம மித்ரே ப்ராதா: த்வம் ஹாரம் ஏபி: லலித விரசிதம் ராதிகாயை திச இதி हस्तप्राप्योऽप्यगम्यो झटिति मुनिजनस्येव धावन्गजेन्द्रं क्रीडन्नापत्य भूमौ पुनरभिपततस्तस्य दन्तं सजीवम् । मूलादुन्मूल्य तन्मूलगमहितमहामौक्तिकान्यात्ममित्रे प्रादास्त्वं हारमेभिर्ललितविरचितं राधिकायै दिशेति

குருவாயூரப்பா! நீ முனிவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் அகப்படுவதில்லை. அதேபோல் அந்த யானையின் அருகில் நின்ற போதிலும் அதன் பிடியில் சிக்கவில்லை. அப்போது நீ விளையாட்டாகத் தரையின் மீது விழுந்தாய். உடனே உன்னை நோக்கி அந்த யானை ஓடி வந்தது. அப்போது அதன் தந்தங்களைப் பிடித்து அவற்றை அடியோடு பிடுங்கினாய். அவற்றின் அடியில் காணப்பட்ட பெரிய முத்துகளை எடுத்து, அவற்றை அழகான மாலையாக்கி, “ராதைக்குக் கொடு”, என்று உன் நண்பனிடம் கூறினாய் அல்லவா?