Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 762)

Dasaka 75 - கம்ஸ வதம்

பாபிஷ்டாபேஹி மார்காத் த்ருதம் இதி வசஸா நிஷ்டுர க்ருத்த புத்தே அம்பஷ்டஸ்ய ப்ரணோதாததிக ஜவ ஜுஷா ஹஸ்திதா க்ருஹ்யமாணா: கேளீ முக்தோSத கோபீ குச கலச சிர ஸ்பர்திநம் கும்பமஸ்ய வ்யாஹத்யாலீயதாஸ்த்வம் சரண புவி புநர் நிர்கதோ வல்கு ஹாஸி பாபிஷ்ட அபேஹி மார்காத் த்ருதம் இதி வசஸா நிஷ்டுர க்ருத்த புத்தே அம்பஷ்டஸ்ய ப்ரணோதாத் அதிக ஜவ ஜுஷா ஹஸ்திதா க்ருஹ்யமாணா: கேளீ முக்த: அத கோபீ குச கலச சிர ஸ்பர்திநம் கும்பம் அஸ்ய வ்யாஹத்ய அலீயதா: த்வம் சரண புவி புந: நிர்கத: வல்கு ஹாஸி पापिष्ठापेहि मार्गाद्द्रुतमिति वचसा निष्ठुरक्रुद्धबुद्धे - रम्बष्ठस्य प्रणोदादधिकजवजुषा हस्तिना गृह्यमाणः । केलीमुक्तोऽथ गोपीकुचकलशचिरस्पर्धिनं कुम्भमस्य व्याहत्यालीयथास्त्वं चरणभुवि पुनर्निर्गतो वल्गुहासी

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அந்த யானைப்பாகனிடம், “அடேய் பாபி! இந்த வழியை விட்டு நகர்ந்து நில்”, என்று கோபத்துடன் கூறினாய். இதனால் அம்பஷ்டன் என்னும் அந்த யானைப்பாகனுக்கு சினம் வந்தது. அவனது கட்டளையால் அந்த யானை உன் அருகில் வந்து உன்னை தனது தும்பிக்கையால் வளைத்தது. நீயோ மிகவும் சுலபமாக அதன் பிடியில் இருந்து நழுவினாய். கோபிகைகளின் ஸ்தனங்களுடன் வெகு நாட்களாகவே போட்டியிட்ட அந்த யானையின் தலையில் இருபுறத்தில் உள்ள முண்டுகளை நீ ஓங்கி அடித்தாய். பின்னர் அதன் கால்களுக்கு இடையே ஓடிப்போய் மறைந்து கொண்டாய். அதன் பின்னர் பரிகாசமாகச் சிரித்தபடி வெளியில் வந்தாய்.