Sriman Narayaneeyam - Dasaka 75 - கம்ஸ வதம் (ச்லோகம் 761)
Dasaka 75 - கம்ஸ வதம்
ப்ராத: ஸந்த்ரஸ்த போஜ க்ஷிதிபதி வசஸா ப்ரஸ்துதே மல்ல தூர்யே ஸங்க்கே ராஜ்ஞாம் ச மஞ்சாநபியயுஷி கதே நந்தகோபேSபி ஹர்ம்யம் கம்ஸே ஸௌதாதிரூடே த்வமபி ஸஹபல: ஸாநுகச்சாரு வேஷோ ரங்க த்வாரம் கதோSபூ: குபித குவாலயாபீட நாகாவலீடம் ப்ராத: ஸந்த்ரஸ்த போஜ க்ஷிதிபதி வசஸா ப்ரஸ்துதே மல்ல தூர்யே ஸங்க்கே ராஜ்ஞாம் ச மஞ்சாந் அபியயுஷி கதே நந்தகோபே அபி ஹர்ம்யம் கம்ஸே ஸௌத அதிரூடே த்வம் அபி ஸஹ பல: ஸாநுக: சாரு வேஷ: ரங்க த்வாரம் கத: அபூ: குபித குவாலயாபீட நாக அவலீடம் प्रातः सन्त्रस्तभोजक्षितिपतिवचसा प्रस्तुते मल्लतूर्ये सङ्घे राज्ञां च मञ्चानभिययुषि गते नन्दगोपेऽपि हर्म्यम् । कंसे सौधाधिरूढे त्वमपि सहबलः सानुगश्चारुवेषो रङ्गद्वारं गतोऽभूः कुपितकुवलयापीडनागावलीढम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அடுத்த நாள் காலை வேளையில் மிகவும் பயந்து இருந்த போஜ அரசனான கம்ஸன் உத்தரவினால், தூர்யம் என்ற வாத்தியம் ஒலிக்கப்பட்டது. இது மல்யுத்தப் போட்டி துவங்குவதற்கான அடையாளம் ஆகும். அனைத்து அரசர்களும் தங்களுக்கு இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். நந்தகோபர், மேல் தளத்தில் அமர்ந்தார். கம்ஸன், மாளிகையின் மேல் மாடத்தில் அமர்ந்தான். அப்போது நீயும் பலராமனும், மிகவும் அழகான உடைகள் அணிந்துகொண்டு, ஆயர் தோழர்கள் புடை சூழ, ரங்கஸ்தானம் என்ற போட்டி நடக்கும் இடத்தின் வாயிலை அடைந்தாய். அங்கு (உன்னைக் கொல்ல) குவாலயபீடம் என்ற யானை, வழியை மறித்து நின்றதாமே!விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-42-32 தொடங்கி, அத்யாயங்கள் 43 மற்றும் 44 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.