Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 760)

Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்

சிஷ்டைர்துஷ்ட ஜநைச்ச த்ருஷ்ட மஹிமா ப்ரீத்யா ச பீத்யா தத: ஸம்பச்யந் புரஸம்பதம் ப்ரவிசரந் ஸாயம் கதோ வாடிகாம் ஸ்ரீதாம்நா ஸஹ ராதிகா விரஹஜம் கேதம் வதந் ப்ரஸ்வபந் ஆநந்தந்நவதார கார்ய கடநாத் வாதேச ஸம்ரக்ஷ மாம் சிஷ்டை: துஷ்ட ஜநை: ச த்ருஷ்ட மஹிமா ப்ரீத்யா ச பீத்யா தத: ஸம்பச்யந் புர ஸம்பதம் ப்ரவிசரந் ஸாயம் கத: வாடிகாம் ஸ்ரீதாம்நா ஸஹ ராதிகா விரஹஜம் கேதம் வதந் ப்ரஸ்வபந் ஆநந்தந் அவதார கார்ய கடநாத் வாத ஈச ஸம்ரக்ஷ மாம் शिष्टैर्दुष्टजनैश्च दृष्टमहिमा प्रीत्या च भीत्या ततः संपश्यन् पुरसम्पदं प्रविवरन्सायं गतो वाटिकाम् । श्रीदाम्ना सह राधिकाविरहजं खेदं वदन् पुस्वप - न्नानन्दन्नवतारकार्यघटनाद्वातेश संरक्ष माम्

ஈசனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னை நல்லவர்கள் அன்பாலும், தீயவர்கள் அச்சத்தாலும் அறிந்து கொண்டனர். நீ நகரத்தின் அழகைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தாய். பின்னர் அங்கு இருந்த நந்தவனம் ஒன்றில் இருந்தாய். அங்கு ஸ்ரீதாமன் என்ற நண்பனிடம் ராதையின் பிரிவால் நீ வாடுவதை உணர்த்தினாய். பின்னர் சிறிது நேரம் உறங்கினாய். உனது அவதாரத்தின் காண நேரம் நெருங்குவதை எண்ணி ஆனந்தம் அடைந்தாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காக்க வேண்டும்.***