Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 759)

Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்

ச்வ: கம்ஸ க்ஷபணோத்ஸவஸ்ய புரத: ப்ராரம்ப தூர்யோபம: சாப த்வம்ஸ மஹா த்வநிஸ்தவ விபோ தேவாநரோமாஞ்சயத் கம்ஸஸ்யாபி ச வேபதுஸ்ததுதித: கோதண்ட கண்ட த்வயீ சண்டாப்யாஹத ரக்ஷி பூருஷ ரவை: உத்கூலிதோSபூத் த்வயா ச்வ: கம்ஸ க்ஷபண உத்ஸவஸ்ய புரத: ப்ராரம்ப தூர்ய உபம: சாப த்வம்ஸ மஹா த்வநி: தவ விபோ தேவாந் அரோமாஞ்சயத் கம்ஸஸ்ய அபி ச வேபது: தத் உதித: கோதண்ட கண்ட த்வயீ சண்ட அப்யாஹத ரக்ஷி பூருஷ ரவை: உத்கூலித: அபூத் த்வயா श्वः कंसक्षपणोत्सवस्य पुरतः प्रारम्भतूर्योपम - श्चापध्वंसमहाध्वनिस्तव विभो देवानरोमाञ्चयत् । कंसस्यापि च वेपथुस्तदुदितः कोदण्डखण्डद्वयी - चण्डाभ्याहतरक्षिपूरुषरवैरुत्कूलितोऽभूत् त्वया

குருவாயூரப்பா! நீ வில்லை முறித்தபோது எழுந்த சத்தம் எப்படி இருந்தது என்றால், மறுநாள் நடக்கவிருக்கும் கம்ஸ வதத்திற்கு முன்பு ஒலிக்கப்படும் தூர்யம் என்னும் வாத்ய இசைக்கு ஒப்பாக இருந்தது. அந்த ஒலியால் தேவர்களும் நடுங்கினர். அதனைக் கேட்ட கம்ஸனுக்குப் பயம் பிறந்தது. நீ அந்த வில்லை எடுத்து காவலர்களை அடித்தவுடன் அவர்கள் அலறினார்கள். இதனைக் கேட்ட கம்ஸனின் அச்சம் மேலும் அதிகமாகியது.