Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 758)
Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்
ஆவிஷ்டோ நகரீம் மஹோத்ஸவவதீம் கோதண்ட சாலாம் வ்ரஜந் மாதுர்யேண து தேஜஸா நு புருஷை: தூரேண தத்தாந்தர: ஸ்ரக்பிர் பூஷிதமர்ச்சிதம் வர தநுர்மா மேதி வாதாத் புர: ப்ராக்ருஹ்ணா: ஸமரோபய: கில ஸமாக்ராக்ஷீரபாங்க்ஷீரபி ஆவிஷ்ட: நகரீம் மஹா உத்ஸவவதீம் கோதண்ட சாலாம் வ்ரஜந் மாதுர்யேண து தேஜஸா நு புருஷை: தூரேண தத்த அந்தர: ஸ்ரக்பி: பூஷிதம் அர்ச்சிதம் வர தநு: மா மா இதி வாதாத் புர: ப்ராக்ருஹ்ணா: ஸமரோபய: கில ஸமாக்ராக்ஷீ: அபாங்க்ஷீ: அபி आविष्टो नगरीं महोत्सववतीं कोदण्डशालां व्रजन् माधुर्येण नु तेजसा नु पुरुषैर्दूरेण दत्तान्तरः । स्रग्भिर्भूषितमर्चितं वरधनुर्मामेति वादात् पुरः प्रागृह्णाः समरोपयः किल समाक्राङ्क्षीरभाङ्क्षीरपि
குருவாயூரப்பா! மிகுந்த விழாக்கோலம் பூண்டிருந்த நகரத்திற்குள் நுழைந்த நீ, வில்லை வைத்திருந்த இடத்திற்குச் சென்றாய். அங்கு நின்ற காவலர்கள் உனது அழகையும் கம்பீரமான ஒளியையும் கண்டு உனக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றார்கள் அல்லவரா? அப்போது காவலர்கள் உன்னிடம், “அதனைத் தொடாதே! வேண்டாம்”, என்று கூறிக் கொண்டிருக்கும்போதே, நீ மலர்கள் இடப்பட்டிருந்த அந்த வில்லை எடுத்து வளைத்து அம்பைத் தொடுத்து, உடைத்தும் விட்டாயாமே!