Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 757)
Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்
ஏஷ்யாமீதி விமுக்தயாSபி பகவந் ஆலேபதார்த்யா தயா தூராத் காதரயா நிரீக்ஷித கதி: த்வம் ப்ராவிசோ கோபுரம் ஆகோஷாநுமித த்வதாகம மஹா ஹர்ஷோல்லலத் தேவகீ வக்ஷோஜ ப்ரகலத் பயோ ரஸ மிஷாத் த்வத் கீர்த்திரந்தர்கதா ஏஷ்யாமி இதி விமுக்தயா அபி பகவந் ஆலேபதார்த்யா தயா தூராத் காதரயா நிரீக்ஷித கதி: த்வம் ப்ராவிச: கோபுரம் ஆகோஷ அநுமித த்வத் ஆகம மஹா ஹர்ஷ உல்லலத் தேவகீ வக்ஷோஜ ப்ரகலத் பய: ரஸ மிஷாத் த்வத் கீர்த்தி அந்த: கதா एष्यामिति विमुक्तयापि भगवन्नालेपदात्र्या तया दूरात् कातरया निरीक्षितगतिस्त्वं प्राविशो गोपुरम् । आघोषानुमितत्वदागममहाहर्षोल्ललद्देवकी - वक्षोजप्रगलत्पयोरसमिषात्त्वत्कीर्तिरन्तर्गता
குருவாயூரப்பா! உனக்கு சந்தனம் பூசிய அந்தக் கூனியிடம், “நான் பிறகு வருகிறேன்”, என்று கூறிச் சென்று விட்டாய். அவள் உன்னை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் நீ வெகு தூரம் செல்லும்வரை நின்று பார்த்தாள். அப்போது நீ கோபுர (கோட்டை) வாயிலுக்குள் நுழைந்தாய். அந்த நேரம் ஏற்பட்ட பெரும் ஆரவாரத்தைக் கேட்ட உனது தாய் தேவகி நீ வந்து விட்டதை யூகித்தாள். அவளது ஸ்தனங்களில் இருந்து தாய்ப்பால் தானாகவே சுரந்தது. இப்படியாகத் தாய்ப்பால் சுரந்தது என்பது, உனது புகழ் நகரத்தில் பரவியது போன்று இருந்தது அல்லவா?