Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 756)
Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்
தாவந்நிச்சித வைபவாஸ்தவ விபோ நாத்யந்த பாபா ஜநா யத்கிஞ்சித்தததே ஸ்ம சக்த்யநுகுணம் தாம்பூல மால்யாதிகம் க்ருஹ்ணாந: குஸுமாதி கிஞ்சந ததா மார்க்கே நிபத்தாஞ்ஜலி: நாதிஷ்டம் பத ஹா யதோSத்ய விபுலாமார்த்திம் வ்ரஜாமி ப்ரபோ தாவத் நிச்சித வைபவா: தவ விபோ ந அத்யந்த பாபா ஜநா யத் கிஞ்சித் தததே ஸ்ம சக்தி அநுகுணம் தாம்பூல மால்ய ஆதிகம் க்ருஹ்ணாந: குஸும ஆதி கிஞ்சந ததா மார்க்கே நிபத்த அஞ்ஜலி: ந அதிஷ்டம் பத ஹா யத: அத்ய விபுலாம் ஆர்த்திம் வ்ரஜாமி ப்ரபோ तावन्निश्चितवैभवास्तव विभो नात्यन्तपापा जना यत्किञ्चिद्ददते स्म शक्त्यनुगुणं ताम्बूलमाल्यादिकम् । गृह्णानः कुसुमादि किञ्चन तदा मार्गे निबद्धाञ्जलि - र्नातिष्ठं बत यतोऽद्य विपुलामार्तिं व्रजामि प्रभो
எங்கும் நிறைந்தவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் பாபங்கள் அதிகம் செய்யாத அந்த நகரத்து மக்கள் உனது பெருமையை உணர்ந்தனர். தங்களால் இயன்றவரை வெற்றிலை, மாலை, சிறு பரிசுகள் ஆகியவற்றை உனக்கு அளித்தனர். நீ அப்படி வரும் பாதையில் நான் மலர்களோ அல்லது வேறு எந்தப் பொருளும் கொடுக்கவோ இல்லையே! அதனால் அல்லவோ இப்போது நான் இந்தப் பிறவி பெற்றுத் துன்பம் அனுபவிக்கிறேன் !!!