Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 755)
Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்
குப்ஜாமப்ஜ விலோசநாம் பதி புந: த்ருஷ்ட்வாSங்காராகே தயா தத்தே ஸாது கிலாங்கராகமததா: தஸ்ய மஹாந்தம் ஹ்ருதி சித்தஸ்தாம்ருஜுதாமத ப்ரதயிதும் காத்ரேSபி தஸ்யா: ஸ்புடம் க்ருஹ்ணந் மஞ்ஜு கரேண தாமுதநய: தாவஜ்ஜகத் ஸுந்தரீம் குப்ஜாம் அப்ஜ விலோசநாம் பதி புந: த்ருஷ்ட்வா அங்காராகே தயா தத்தே ஸாது கில அங்க ராகம் அததா: தஸ்ய: மஹாந்தம் ஹ்ருதி சித்தஸ்தாம் ருஜுதாம் அத ப்ரதயிதும் காத்ரே அபி தஸ்யா: ஸ்புடம் க்ருஹ்ணந் மஞ்ஜு கரேண தாம் உதநய: தாவத் ஜகத் ஸுந்தரீம் कुब्जामब्जविलोचनां पथि पुनर्दृष्ट्वाङ्गरागे तया दत्ते साधु किलाङ्गरागमददास्तस्या महान्तं हृदि । चित्तस्थामृजुतामथ प्रथयितुं गात्रेऽपि तस्याः स्फुटं गृह्णन् मञ्जु करेण तामुदनयस्तावज्जगत्सुन्दरीम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் தாமரை மலர் போன்று மிகவும் அழகாக விளங்கிய கண்களை உடைய ஒரு கூன் விழுந்த பெண் உனக்குச் சந்தனத்தைப் பூசினாள். அதற்குப் பதிலாக நீ அவளது மனதில் உனது எழிலான திருமேனி மீது உள்ள ஆசையை அதிமாகக் கொடுத்தாய். அவளது உள்ளத்தில் இருந்த நேர்மையை அவளது உடலிலும் அளிக்க எண்ணம் கொண்டு, அவளது கையை உனது திருக்கரங்களால் மெதுவாகப் பிடித்து, அவளது கூனை நிமிர்த்தினாய். அவள் அப்போது உலகில் சிறந்த அழகியாக மாறினாள் அல்லவா?