Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 754)
Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்
பூயோ வாயகமேகமாயத மதிம் தோஷேண வேஷோசிதம் தாச்வாம்ஸம் ஸ்வபதம் நிநேத ஸுக்ருதம் கோ வேத ஜீவாத்மநாம் மாலாபி: ஸ்தபகை: ஸ்தவைரபி புநர்மாலாக்ருதா மாநிதோ பக்திம் தேந வ்ருதாம் திதேசித பராம் லக்ஷ்மீம் ச லக்ஷ்மிபதே பூய: வாயகம் ஏகம் ஆயத மதிம் தோஷேண வேஷ உசிதம் தாச்வாம்ஸம் ஸ்வபதம் நிநேத ஸுக்ருதம் க: வேத ஜீவாத்மநாம் மாலாபி: ஸ்தபகை: ஸ்தவை: அபி புந: மாலாக்ருதா மாநித: பக்திம் தேந வ்ருதாம் திதேசித பராம் லக்ஷ்மீம் ச லக்ஷ்மிபதே भूयो वायकमेकमायतमतिं तोषेण वेषोचितं दाश्वांसं स्वपदं निनेथ सुकृतं को वेद जीवात्मनाम् । मालाभिः स्तबकैः स्तवैरपि पुनर्मालाकृता मानितो भक्तिं तेन वृतां दिदेशिथ परां लक्ष्मीं च लक्ष्मीपते
மஹாலக்ஷ்மியின் பதியே! குருவாயூரப்பா! அப்போது மதியூகம் படைத்த தையல்காரன் ஒருவன் உனக்கு ஏற்றதுபோல் ஓர் ஆடையை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் அளித்தான். அவனுக்கு, நீ மகிழ்ந்து உனது ஸ்ரீவைகுண்டத்தை அளித்தாய் அல்லவா? ஒரு ஜீவன் செய்த புண்ணியத்தை யாரால் அறிய இயலும்? அதன் பின்னர் மலர்கள் தொடுப்பவன் ஒருவன் உன்னை மாலைகளாலும் மலர்களாலும் துதித்து வணங்கினான். அவனது செயல் கண்டு மகிழ்ந்த நீ அவனுக்கு சிறந்த பக்தியையும் மிகுந்த செல்வத்தையும் அளித்தாயாமே?