Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 753)
Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்
தாஸாமாகலயந்நபாங்க வலநை: மோதம் ப்ரஹர்ஷாத்புத வ்யாலோலேஷு ஜநேஷு தத்ர ரஜகம் கஞ்சித் படீம் ப்ரார்த்தயந் கஸ்தே தாஸ்யதி ராஜகீய வஸநம் யாஹீதி தேநோதித: ஸத்யஸ்தஸ்ய கரேண சீர்ஷமஹ்ருதா: ஸோSப்யாப புண்யாம் கதிம் தாஸாம் ஆகலயந் அபாங்க வலநை: மோதம் ப்ரஹர்ஷ அத்புத வ்யாலோலேஷு ஜநேஷு தத்ர ரஜகம் கஞ்சித் படீம் ப்ரார்த்தயந் க: தே தாஸ்யதி ராஜகீய வஸநம் யாஹி இதி தேந உதித: ஸத்ய: தஸ்ய கரேண சீர்ஷம் அஹ்ருதா: ஸ: அபி ஆப புண்யாம் கதிம் तासामाकलयन्नपाङ्गवलनैर्मोदं प्रहर्षाद्भुत - व्यालोलेषु जनेषु तत्र रजकं कञ्चित्पटीं प्रार्थयन् । कस्ते दास्यति राजकीयवसनं याहीति तेनोदितः सद्यस्तस्य करेण शीर्षमहृथाः सोऽप्याप पुण्यां गतिम्
குருவாயூரப்பா! நீ உனது மயக்கும் கடைக்கண் பார்வை மூலம் அந்தப் பெண்ணை மகிழ வைத்தாய். உன்னைக் கண்ட அனைவரும் மிகுந்த மகிழ்வும் பேரானந்தமும் அடைந்தனர். அப்போது அந்த வழியாக அரண்மனை வண்ணான் ஒருவன் வந்தான். அவனிடம் நீ ஓர் உடையைக் கேட்டாய். ஆனால் அவனோ, “இது அரசனின் உடைகள் ஆகும். இதை உனக்கு யார் கொடுப்பார்கள்? உடனே நகர்ந்து செல்”, என்று விரட்டினான். இதனால் கோபம் கொண்ட நீ அவனது தலையைக் கொய்தாய். ஆயினும் உனது திருக்கரம் அவன் மீது பட்டதால் அவன் மோக்ஷம் பெற்றான் அல்லவா?