Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 752)

Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்

த்வத் பாத த்யுதிவத் ஸராக ஸுபகா: த்வத்மூர்த்திவத்யோஷித: ஸம்ப்ராப்தா விலஸத் பயோதர ருசோ லோலா பவத் த்ருஷ்டிவத் ஹாரிண்யஸ்த்வதுர: ஸ்தலீவத் அயி தே மந்த ஸ்மித ப்ரௌடிவத் நைர்மல்யோல்லஸிதா: கசௌக ருசிவத் ராஜத் கலாபாச்ரிதா: த்வத் பாத த்யுதிவத் ஸராக ஸுபகா: த்வத் மூர்த்திவத் யோஷித: ஸம்ப்ராப்தா விலஸத் பயோதர ருச: லோலா பவத் த்ருஷ்டிவத் ஹாரிண்யை: த்வத் உர: ஸ்தலீவத் அயி தே மந்த ஸ்மித ப்ரௌடிவத் நைர்மல்ய உல்லஸிதா: கசௌக ருசிவத் ராஜத் கலாப ஆச்ரிதா: त्वत्पादद्युतिवत् सरागसुभगास्त्वन्मूर्तिवद्योषितः सम्प्राप्ता विलसत्पयोधररुचो लोला भवद्दृष्टिवत् । हारिण्यस्त्वदुरस्स्थलीवदयि ते मन्दस्मितप्रौढिव - न्नैर्मल्योल्लसिताः कचौघरुचिवद्राजत्कलापाश्रिताः

குருவாயூரப்பா! உன்னைக் காண பல பெண்கள் அங்கு வந்தனர். அவர்கள் எப்படி இருந்தனர். உனது பாதங்கள் போல் சிவந்த நிறமாகவும், உனது திருமேனி போன்ற ஸ்தனங்கள் கொண்டும், உனது கண்களைப் போல் அங்கும் இங்கும் ஓடுபவர்களாகவும், உனது திருமார்பு போன்று அழகான ஆபரணங்கள் அணிந்தவர்களாகவும், உனது புன்னகை போன்று வெண்மையான தூய மனம் உடையவர்களாகவும், உனது தலையில் விளங்கும் மயில்பீலி போன்று கூந்தலில் ஆபரணம் அணிந்தவர்களாகவும் இருந்தனர்.