Sriman Narayaneeyam - Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல் (ச்லோகம் 751)

Dasaka 74 - மதுரா நகரத்திற்கு வருதல்

ஸம்ப்ராப்த மதுராம் திநார்த்த விகமே தத்ராந்தரஸ்மிந் வஸந் ஆராமே விஹிதாசந: ஸகி ஜநை: யாத: புரீமீக்ஷிதும் ப்ராபோ ராஜபதம் சிர ச்ருதி த்ருத வ்யாலோக கௌதூஹல ஸ்த்ரீ பும்ஸோத்யதகண்ய புண்ய நிகளை: ஆக்ருஷ்யமாணோ நு கிம் ஸம்ப்ராப்த மதுராம் திந அர்த்த விகமே தத்ர அந்தர அஸ்மிந் வஸந் ஆராமே விஹித ஆசந: ஸகி ஜநை: யாத: புரீம் ஈக்ஷிதும் ப்ராப: ராஜபதம் சிர ச்ருதி த்ருத வ்யாலோக கௌதூஹல ஸ்த்ரீ பும்ஸ உத்யத் அகண்ய புண்ய நிகளை: ஆக்ருஷ்யமாண: நு கிம் सम्प्राप्तो मथुरां दिनार्धविगमे तत्रान्तरस्मिन् वसन्नारामे विहिताशनः सखिजनैर्यातः पुरीमीक्षितुम् । प्रापो राजपथं चिरश्रुतिधृतव्यालोककौतूहल - स्त्रीपुंसोद्यदगण्यपुण्यनिगलैराकृष्यमाणो नु किम्

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ நடுப்பகலில் மதுரா நகரத்தை அடைந்தாய். அந்த நகரத்தில் இருந்த ஒரு தோட்டத்தில் அமர்ந்து உணவு உட்கொண்டாய். அதன் பின்னர் உனது நண்பர்களுடன் சேர்ந்து நகரத்தைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினாய். அந்த நகரத்தில் இருந்த பல ஆண்களும் பெண்களும் உன்னைப் பற்றியும் உனது பெருமைகளைப் பற்றியும் கேள்விப்பட்டு, உன்னைக் காண பல நாட்களாகக் காத்திருந்தனர். அவர்கள் முன்வினைப் பயனால் அவர்களுக்கு உண்டான புண்ணியம் என்ற சங்கிலிதான் உன்னைக் கட்டி இழுத்து அந்த நகரத்தின் வீதிகளுக்குக் கொண்டு வந்ததா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் x-41-19 முதல் x-42-23 ஆகியவற்றின் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.