Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 750)
Dasaka 73 - மதுரா புறப்படுதல்
கிமு சீதளிமா மஹாந் ஜலே யத் புலகோSஸாவிதி சோதிதேந தேந அதிஹர்ஷ நிருத்தரேண ஸார்த்தம் ரதவாஸீ பவநேச பாஹி மாம் த்வம் கிமு சீதளிமா மஹாந் ஜலே யத் புலக: அஸௌ இதி சோதிதேந தேந அதிஹர்ஷ நிருத்தரேண ஸார்த்தம் ரதவாஸீ பவந ஈச பாஹி மாம் த்வம் किमु शीतलिमा महान् जले यत् पुलकोऽसाविति चोदितेन तेन । अतिहर्षनिरुत्तरेण सार्धं रथवासी पवनेश पाहि मां त्वम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஈசனே! நீ அவரை நோக்கி, “என்ன அக்ரூரரே! யமுனையின் நீர் மிகவும் குளிர்ந்து இருந்ததா என்ன? உங்கள் உடல் முழுவதும் மயிர்க்கூச்சல் காணப்படுகிறதே!”, என்று அன்புடன் கேட்டாய். அவர் மகிழ்வின் காரணமாக வார்த்தைகள் கூறாமல் நின்றார். நீ அவருடன் தேரில் அமர்ந்தாய். குருவாயூரின் ஈசனே! என்னை நீயே காப்பாற்ற வேண்டும்.***