Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 749)
Dasaka 73 - மதுரா புறப்படுதல்
ஸ ததா பரமாத்ம ஸௌக்ய ஸிந்தௌ விநிமக்ந: ப்ரணுவந் ப்ரகார பேதை: அவிலோக்ய புநச்ச ஹர்ஷ ஸிந்தோ: அநுவ்ருத்யா புலகாவ்ருதோ யயௌ த்வாம் ஸததா பரமாத்ம ஸௌக்ய ஸிந்தௌ விநிமக்ந: ப்ரணுவந் ப்ரகார பேதை: அவிலோக்ய புந: ச ஹர்ஷ ஸிந்தோ: அநுவ்ருத்யா புலக ஆவ்ருத: யயௌ த்வாம் स तदा परमात्मसौख्यसिन्धौ विनिमग्नः प्रणुवन् प्रकारभेदैः । अविलोक्य पुनश्च हर्षसिन्धोरनुवृत्या पुलकावृतो ययौ त्वाम्
குருவாயூரப்பா! இதனைக் கண்ட அக்ரூரர் பேரானந்தக் கடலில் மூழ்கினார். உன்னைப் பலவாகத் துதித்தார். உனது இப்படிப்பட்ட தரிசனம் மறைந்த பிறகும் அவரது ஆனந்தம் நிலைத்து நின்றது. அந்த ஆனந்தத்துடனே மயிர் கூச்சல் எடுத்தவராக உன்னிடம் வந்தார் அல்லவா?