Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 748)

Dasaka 73 - மதுரா புறப்படுதல்

புநரேஷ நிமஜ்ஜய புண்யசாலீ புருஷம் த்வாம் பரமம் புஜங்க போகே அரி கம்பு கதாம்புஜை: ஸ்புரந்தம் ஸுர ஸித்தௌக பரீதமாலுலோகே புந: ஏஷ நிமஜ்ஜய புண்யசாலீ புருஷம் த்வாம் பரமம் புஜங்க போகே அரி கம்பு கதா அம்புஜை: ஸ்புரந்தம் ஸுர ஸித்த ஓக பரீதம் ஆலுலோகே पुनरेष निमज्य पुण्यशाली पुरुषं त्वां परमं भुजङ्गभोगे । अरिकम्बुगदाम्बुजैः स्फुरन्तं सुरसिद्धौघपरीतमालुलोके

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! புண்ணியம் செய்தவரான அக்ரூரர் மீண்டும் நீரில் மூழ்கினார். அப்போது உன்னை சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை உடைய நான்கு கரங்களுடனும், தேவர்கள் கூட்டம் சூழ நின்றவனாகவும், ஸ்ரீமந்நாராயணனாக (பரமபுருஷனாக) ஆதிசேஷன் மீது உள்ளவனாகக் கண்டாராமே!