Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 747)

Dasaka 73 - மதுரா புறப்படுதல்

நியமாய நிமஜ்ய வாரிணி த்வாம் அபிவீக்ஷ்யாத ரதேSபி காந்திநேய: விவசோSஜநி கிம் ந்விதம் விபோஸ்தே நநு சித்ரம் த்வவலோகநம் ஸமந்தாத் நியமாய நிமஜ்ய வாரிணி த்வாம் அபிவீக்ஷ்ய அத ரதே அபி காந்திநேய: விவச: அஜநி கிம் நு இதம் விபோ: தே நநு சித்ரம் து அவலோகநம் ஸமந்தாத் नियमाय निमज्य वारिणि त्वमभिवीक्ष्याथ रथेऽपि गान्दिनेयः । विवशोऽजनि किं न्विदं विभोस्ते ननु चित्रं त्ववलोकनं समन्तात्

குருவாயூரப்பா! அப்போது தனது கடன்களை கழிப்பதற்காக அக்ரூரர், யமுனை நதியில் மூழ்கினார். அந்த நதியின் உள்ளே உன்னைக் கண்டார். மிகுந்த வியப்புடன் வெளியே வந்தார். நீ தேரிலும் நிற்பதைக் கண்டார். எங்கும் நிறைந்து உள்ள நீ இப்படிக் காட்சி அளிப்பது வியப்பு அல்லவே!