Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 746)
Dasaka 73 - மதுரா புறப்படுதல்
அநஸா பஹுலேந வல்லவாநாம் மநஸா சாநுகதோSத வல்லபாநாம் வநமார்த்தம்ருகம் விஷண்ண வ்ருக்ஷம் ஸமதீதோ யமுநா தடீமயாஸீ: அநஸா பஹுலேந வல்லவாநாம் மநஸா ச அநுகத: அத வல்லபாநாம் வநம் ஆர்த்தம்ருகம் விஷண்ண வ்ருக்ஷம் ஸமதீத: யமுநா தடீம் அயாஸீ: अनसा बहुलेन वल्लवानां मनसा चनुगतोऽथ वल्लभानाम् । वनमार्तभृगं विषण्णवृक्षं समतीतो यमुनातटीमयासीः
குருவாயூரப்பா! நீ செல்லும்போது உன் பின்னால் பல ஆயர்களின் வண்டிகளும், கோபிகைகளின் இனிமையான மனங்களும் பின்பற்றின. உன்னுடைய இந்த பிரிவு தாங்காமல் ப்ருந்தாவனத்தில் இருந்த விலங்குகளும், மரங்களும் கலங்கின. இவற்றைக் கடந்து யமுனை நதியின் கரையை நீ அடைந்தாய்.