Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 745)

Dasaka 73 - மதுரா புறப்படுதல்

ஸவிஷாதபரம் ஸயாஞ்சமுச்சை: அதிதூரம் வநிதாபிரீக்ஷ்யமாண: ம்ருது தத்திசி பாதயந்நபாங்காந் ஸபலோSக்ரூர ரதேந நிர்கதோSபூ: ஸவிஷாதபரம் ஸயாஞ்சம் உச்சை: அதிதூரம் வநிதாபி: ஈக்ஷ்யமாண: ம்ருது தத் திசி பாதயந் அபாங்காந் ஸபல: அக்ரூர ரதேந நிர்கத: அபூ: सविषादभरं सयाञ्चमुच्चैरतिदूरं वनिताभिरीक्ष्यमाणः । मृदु तद्दिशि पातयन्नपाङ्गान् सबलोऽक्रूररथेन निर्गतोऽभूः

அந்த கோபிகைகள் நெஞ்சம் கனத்தது. அப்படிப்பட்ட கனமான இதயத்துடன் உன்னிடம், “க்ருஷ்ணா! நீ சீக்கிரமாகத் திரும்பி வந்துவிட வேண்டும், சரியா?”, என்று கூறினர். தங்கள் தலையை நிமிர்த்தி நிமிர்த்தி உன்னைப் பார்த்தனர். நீயும் அவர்கள் இருந்த திசையில் உனது கடைக்கண் பார்வையைச் செலுத்தினாய். பின்னர் பலராமனுடன் அக்ரூரரின் தேரில் ஏறிப் புறப்பட்டாய்.