Sriman Narayaneeyam - Dasaka 73 - மதுரா புறப்படுதல் (ச்லோகம் 744)
Dasaka 73 - மதுரா புறப்படுதல்
அசிராதுபயாமி ஸந்நிதம் வோ பவிதா ஸாது மயைவ ஸங்கமஸ்ரீ: அம்ருதாம்புநிதௌ நிமஜ்ஜயிஷ்யே த்ருதமித்யாச்வஸிதா வதூரகார்ஷீ: அசிராத் உபயாமி ஸந்நிதம் வ: பவிதா ஸாது மயா ஏவ ஸங்கமஸ்ரீ: அம்ருத அம்புநிதௌ நிமஜ்ஜயிஷ்யே த்ருதம் இதி ஆச்வஸிதா: வதூ: அகார்ஷீ: अचिरादुपयामि सन्निधिं वो भविता साधु मयैव सङ्गमश्रीः । अमृताम्बुनिधौ निमज्जयिष्ये द्रुतमित्याश्वसिता वधूरकार्षीः
குருவாயூரப்பா! நீ அந்த கோபிகைகளிடம் (உனது நண்பன் மூலமாக), “நான் வெகு சீக்கிரமாகத் திரும்பி வருவேன். அப்போது என்னுடன் கூடி நிற்கும் உயர்ந்த செல்வங்களும் இன்பமும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களை அந்த இன்பத்தில் நான் விரைவில் வந்து ஆழ்த்துகிறேன்”, என்று ஆறுதலாகக் கூறினாய்.